சென்னை: கர்நாடக பேரவையில் உரையை வாசிக்காமல் சென்ற ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலில் தமிழ்நாடு, பின்னர் கேரளா, தற்போது கர்நாடகத்தில் ஆளுநர்கள் அத்துமீறல்; அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகளாக ஆளுநர்கள் செயல்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்பை குலைக்கும் செயல். ஒன்றிய அரசின் திட்டம் வேண்டுமென்றே செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர்கள் உரையாற்றும் நடைமுறையை மாற்றுவது ஒன்றே பிரச்சனைக்கு தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார்.
