சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் மீண்டும் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க தயாராக இருக்கிறேன் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.
