ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு

 

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 17 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதேர்வாஹ்-சம்பா சாலையில் ராணுவ வாகனம் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம் உருக்குலைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Related Stories: