தர்மபுரி, ஜன. 22: தர்மபுரி கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று தர்மபுரி உட்கோட்ட ெநடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி, நான்கு ரோடு அருகே நடந்தது. இதில், உதவி கோட்ட பொறியாளர் சீனிவாசன் கொடியசைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்றவர்கள் தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பை தவிப்பீர், சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி, போதையில் பயணம் பாதையில் மரணம், சாலையில் முந்தாதே வாழ்க்கையில் முந்து போன்ற வாசகம் பொருந்திய கை பதாகைகள் ஏந்தி கோசமிட்டபடி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். நான்குரோடு சந்திப்பில் இருந்து புறப்பட்ட பேரணி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர்கள் மதன்குமார், அருணா, சாலை ஆய்வாளர்கள் அபிமன்னன், சரவணன், மாரியப்பன், முருகன், கார்த்திக், ஈஸ்வரி, அங்கப்பன், துரைராஜ் மற்றும் பெரியசாமி உள்ளிட்ட நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- பாதுகாப்பு விழிப்புணர்வு
- தர்மபுரி
- தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
- தர்மபுரி கோட்ட நெடுஞ்சாலைத் துறை
- நான்கு சாலை
