சங்கரன்கோவில், ஜன. 21: சங்கரன்கோவில் கூட்டுறவு பால் விற்பனை நிலையத்தை கொட்டும் மழையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வருகை தந்தார். அவருக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொட்டும் மழையில் அமைச்சர் ராஜகண்ணப்பன், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநயினார் கோயில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் ஆய்வால் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அங்கு செயல்படுத்தி வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.
