முதல்வரின் அயராத உழைப்பால் 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழ்நாடு 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சி எட்டியுள்ளது: நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது

சென்னை: 2026ம் ஆண்டில் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளதாவது: நமது முதல்வர் அயராத உழைப்பால் கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதம் என்ற உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இத்தகைய உயர் வளர்ச்சியை நமது மாநிலம் அடைவது இதுவே முதல்முறை. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

தமிழகத்தில் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ.6,936 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2.23 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில், ஒவ்வோர் அரிசி அட்டைதாரருக்கும் ரூ.3 ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு முழு செங்கரும்பும் பொங்கல் பரிசாக முதல்வர் உத்தரவுப்படி வழக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் அனைவரும் உவகையுடன் தமிழர் திருநாளை கொண்டாடி இது பெரிதும் உதவி இருக்கும் என நான் நம்புகிறேன்.

நமது அரசு பொறுப்பேற்ற போது கோவிட் பெருந்தொற்றின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். முதல்வர் பெருமுனைப்புடன் செயலாற்றி அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி, மருத்துவமனைகளில் போதுமான ஆச்சிஜன் வசதி, கூடுதல் படுக்கை வசதிகள் போன்ற பல்வேறு முயற்சிகளின் மூலம் கோவிட் பெருந்தோற்றிலிருந்து தமிழ்நாட்டினை மீட்டெடுத்த மாபெரும் சாதனையை வரலாறு என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறும்.

Related Stories: