உள்ளாட்சி அமைப்பில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெற சட்டத் திருத்தம்

சென்னை: சட்டப் பேரவையில் ஆளுநர் உரையின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தொடக்க நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை மற்றும் திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் , அறிவுசார் குறைபாடு உடையவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினராக்க இந்த அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 3631 மாற்றுத் திறனாளிகள் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாகியுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை இந்த அரசு ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 5.88 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர பராமரிப்பு தொகை தற்போது ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.58 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

Related Stories: