மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கல்யாணியுடன் பணியாற்றிய உதவி மேலாளரே பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. டெத் கிளைம் பாலிசி கொடுக்காமல் கால தாமதப்படுத்தியதாக முகவர்கள் கல்யாணிடம் புகார் அளித்து உள்ளனர். உயரதிகாரிகளுக்கு புகாரளிப்பேன் என கல்யாணி தெரிவித்ததால் ஆத்திரமடைந்த உதவி மேலாளர் கொலை செய்துள்ளார்
