பலூனுக்கு காஸ் நிரப்பியபோது சிலிண்டர் வெடித்து பெண் பலி: 11 பேர் படுகாயம்

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் நேற்று ஆற்றுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இரவு 7 மணியளவில் திருவிழா முடிந்து ஆற்றங்கரையில் இருந்து பொதுமக்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கு பலூன் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு வியாபாரி, ஒவ்வொரு பலூனாக காஸ் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பலருக்கு கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்கள் சிதறி படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை உடனே மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் இதில் கலா (55) என்ற பெண் பலியானார்.11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: