திருச்சி, ஜன.20: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஜன.23 அன்று நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். திருச்சி மாவட்ட கலெக்டர் அலவலகத்தில் நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை தொடர்பான கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ, மனுக்கள் வாயிலாகவோ தொிவிக்கலாம். விவசாயிகள் இவ்வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மர்ம நபர்கள் அட்டூழியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 23ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- கலெக்டர்
- திருச்சி
- மாவட்ட கலெக்டர்
- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
- திருச்சி மாவட்ட ஆட்சியர்
- திருச்சி மாவட்டம்
- அலவலகம்…
