காளை முட்டி முதியவர்கள் 2 பேர் பலி

மதுரை: மதுரை, மேல அனுப்பானடி டிஎன்ஹெச்பி காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (68). விவசாயி. மாட்டுப்பொங்கல் நாளான 16ம் தேதி மதுரை பாலமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்வையிட சென்றார். அப்போது, ஜல்லிக்கட்டில் பங்கேற்று வாடிவாலில் இருந்து திரும்பிய ஒரு காளை அவரை முட்டியதுடன், காளையின் கயிற்றில் செல்வராஜின் கால் சிக்கியது. இதில் நிலைதடுமாறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அன்று மதியம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர். நேற்று முன்தினம் நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார். பாலமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், வேலூர் அடுத்த ஊசூர் கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் நேற்று மாடு விடும் விழாவில், கண்ணமங்கலம் காட்டுக்காநல்லூரை சேர்ந்த திலகர்(65) என்பவரை காளை முட்டித்தள்ளியது. இதில் படுகாயமடைந்த திலகர் பரிதாபமாக இறந்தார்.

Related Stories: