109வது பிறந்த நாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை

சென்னை: அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 109வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதா சிலைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து எம்ஜிஆர் மன்றத்தில் ஏற்பாடு செய்திருந்த 109 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி ஊட்டினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், கோகுலஇந்திரா, வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: