தமிழ்நாட்டுக்கு 23ம்தேதி வருகை தே.ஜ. கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி 23ம் தேதி தமிழகம் வர உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார். அதற்கான ஏற்பாடுகள், தயாரிப்புகள் நடந்து வருகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜ ஒரு மிகப் பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பாஜ ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஒரு மிகப்பெரிய அளவிலான வெற்றியை பாஜ பெற்றுள்ளது.

இன்று எம்.ஜி.ஆர். பிறந்த தினம். எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர், எடப்பாடி பழனிசாமி 5 வாக்குறுதிகளை தமிழக வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளார். அதை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். மகாராஷ்டிரா மற்றும் திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தல்களில் பெற்ற பாஜவின் வெற்றியானது தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான நாளும், நேரமும் குறிக்கப்பட்டுள்ளது. பிரமதரின் வருகையை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான வேலைகளை தொடங்கி செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: