கூடலூர்: யாருடன் கூட்டணி என்பதை 30 நாட்களில் சொல்வதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம், தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு விவசாய சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வரும், போடி தொகுதியின் எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். தை மாதம் இப்போது தான் பிறந்திருக்கிறது. இன்னும் 30 நாட்கள் உள்ளன. தற்போது எம்எல்ஏவாக உள்ள போடி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.
