சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை காங்கிரஸ் ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாளை டெல்லி செல்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை நாளை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளை கூட்டணியில் கேட்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
