நடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்

சிதம்பரம், ஜன. 27: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவின்போது தீட்சிதர்கள் கோயில் கோபுரத்தில் கொடி ஏற்றி வைப்பர். நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கோயில் கோபுரத்தில் கொடியேற்றப்பட்டது.கோயிலின் உள்ளே இருந்து தீட்சிதர்கள் மேள, தாளங்கள் முழங்க தேசியக் கொடியை எடுத்து வந்தனர். பின்னர் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி க்கு தீட்சிதர்கள் மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>