162 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து புதுகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் டிராக்டர் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை, ஜன. 27: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் டிராக்டர்களில் ஊர்வலம் நடத்த அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் டிராக்டர் ஊர்வலம் நடத்த அனுமதியில்லையென போலீசார் அறிவித்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் வந்தனர். இதனால் நகருக்குள் வரும் அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக மச்சுவாடி, கேப்பரை, திருவப்பூர், பெருமாநாடு உள்ளிட்ட பகுதிகளில் டிராக்டர்களில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து புதுக்கோட்டை திலகர் திடலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் சோமையா தலைமை வகித்தார். திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர், விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பொன்னுசாமி, மாவட்ட தலைவர் ராமையன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கறம்பக்குடி: புதுக்கோட்டையில் நடைபெறும் பேரணிக்கு செல்வதற்காக கறம்பக்குடியை சேர்ந்த விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் திருமணஞ்சேரி ஆர்ச் அருகே இருந்து டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல முயன்றனர். அப்போது கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த இடத்திலேயே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு விவசாயிகள் அனைவரும் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் புதுக்கோட்டைக்கு சென்றனர். அதேபோல கந்தர்வக்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக தங்களது இருசக்கர வாகனங்களில் சென்றனர். அப்போது அவர்களையும் போலீசார் தடுத்து நிறுததினர். இதனால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: