சிறுமிக்கு பாலியல் தொல்லை விமான நிலையத்தில் எலக்ட்ரீஷியன் கைது

பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராம் அண்ணாநகர், 8வது தெருவை சேர்ந்தவர் வினோத் (33). இவர், துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். இவரது மனைவி தனலட்சுமி (29), இவர்களது வீட்டில் கடந்த 2019ம் ஆண்டு தனலட்சுமியின் அக்கா மகள் 14 வயது சிறுமி வந்து தங்கியுள்ளார். அப்போது வினோத் துபாயில் இருந்து விடுமுறைக்கு வந்தார். அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு வினோத், மீண்டும் துபாய் சென்றுவிட்டார்.இந்நிலையில் வினோத், 14 வயது சிறுமிக்கு எழுதிய காதல் கடிதம் கிடைத்துள்ளது. இதைபார்த்த தனலட்சுமி, அதிர்ச்சியடைந்தார். சிறுமியிடம் விசாரித்தபோது வினோத், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தனலட்சுமி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது வினோத், துபாயில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வினோத், நேற்றுமுன்தினம் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். அவர் மீது தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததால் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து ஆவடி போலீஸ் உதவி கமிஷனருக்கு தகவல் கொடுத்தனர். தனிப்படை போலீசார் விரைந்து வந்து வினோத்தை கைது செய்து ஆவடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>