வீடுகளை இடித்து விட்டதாக கூறி தாலுகா அலுவலகம் முன் குடும்பத்துடன் பெண் தர்ணா

காடையாம்பட்டி, ஜன.26: காடையாம்பட்டி அருகே சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் மனைவி சின்னப்பொண்ணு.  இவர் தனது தந்தை பெயரில் உள்ள இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வந்தது. இதுகுறித்து சின்னபொண்ணு தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், வருவாய் துறையினர் போலீசாரின் உதவியுடன் சிக்கணம்பட்டிக்கு சென்று, நிலத்தை அளந்து காட்டியுள்ளனர். அதை தொடர்ந்து சின்னப்பொன்னுவின் உறவினர்கள், அவரது சாலை வீட்டை அகற்றி உள்ளனர்.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது நிலத்தை அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து, காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன், சின்னப்பொண்ணு தனது குடும்பத்துடன் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்.

அப்போது துணை தாசில்தார் கிரிஜா, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பது எங்களுக்கு தெரியாது. நீங்கள் மனு கொடுத்து இருந்தால் அதை அளவீடு செய்திருக்க மாட்டோம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அந்த நிலம் குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சுமார் 2மணி நேரத்திற்கு பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories:

>