முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவுக்கான இது நம்ம ஆட்டம் போட்டிகளுக்கான கண்காணிப்புக்குழு கூட்டம்

அரியலூர், ஜன.10: முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாக்கான இது நம்ம ஆட்டம் போட்டிகளுக்கான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்- 2026, ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம்-100 மீ மற்றும் குண்டு எறிதல், கபாடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) எறிபந்து (பெண்களுக்கு மட்டும்) ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள் மற்றும் உடல்சார் மாற்றுததிறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவு சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இவ்விளையாட்டு போட்டிகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளில் ஒன்றிய அளவிலான போட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 22முதல் 25ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயதுடைய விளையாட்டில் ஆர்வம் கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மற்றும் மாணவியர்கள், மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தவறாமல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் https://sdat.tn.gov.in அல்லது https://cmyouthfestival.sdat.in என்ற இணையதளத்தில் உள்ள போட்டிகளில் பங்கேற்பது குறித்தான முழுவிவரங்கள் மற்றும் விதிமுறைகளை படித்து பிறகு சரியான பிரிவில் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து (குறிப்பு: இணையதளம் வாயிலாக மட்டுமே) முன்பதிவு செய்திட வேண்டும். முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் கலந்துகொள்ளலாம். முன்பதிவு செய்திட கடைசி நாள்21ம் தேதிஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: