கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ திருச்செங்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும், தான் பாதுகாப்பு அரண் என்பதை முதல்வர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ஆனால், சொந்த மனைவியையே பாதுகாக்க முடியாதவர்கள், தமிழக பெண்களை காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு, தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், குறிப்பாக திருச்செங்கோட்டில் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால், மகளிர் சுயஉதவி குழுவினரின் ஆதரவு இருந்தால் தான் முடியும். பெண்கள் ஆதரித்தால் தான், ஒரு ஆட்சி அமைய முடியும். அதிலும் குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் நீங்கள் மனது வைத்தால் தான், நாட்டில் ஒரு ஆட்சி அமைய முடியும். இவ்வாறு ஈஸ்வரன் எம்எல்ஏ பேசினார்.
