தொண்டியக்காடு கிராமத்தில் 87 பயனாளிகளுக்கு 2 ஏக்கருக்கான பட்டா

முத்துப்பேட்டை, ஜன. 9: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட தொண்டியக்காடு பல்நோக்கு பேரிடர் மைய கட்டிடத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பயனாளிகளுக்கு அரசு வீட்டுமனை இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் புதுக்குடி, முனங்காடு, மேல தொண்டியக்காடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 87 பயனாளிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலத்திற்கான இ-பட்டாவினை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, முத்துப்பேட்டை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், வட்டார வேளாண்மை குழு தலைவர் இரா.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: