புதுக்கடை, ஜன.9: புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் ததேயூஸ்- பிரேமா தம்பதி மகள் ஜீவிதா (27). மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து விசாரித்ததில் அவர் கடைக்கு வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ஜீவிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தாயார் பிரேமா (52) புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.
