கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி மாயம்

கன்னியாகுமரி, ஜன.9: கன்னியாகுமரி அருகே கொட்டாரம், லட்சுமிபுரம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் டேவிட் தம்பிராஜன்(59). இவர் மின்வாரியத்தில் கணக்கீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஷர்மிளா(24). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் ஏஎன்எம் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி இரவு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுபற்றி டேவிட் தம்பிராஜன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories: