நீடாமங்கலம் அருகே வேளாண் மாணவிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி

நீடாமங்கலம், ஜன. 8: வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கோவில்வெண்ணி இயற்கை விவசாயிகள் குழுவினருடன் பயிற்சியில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கோவில்வெண்ணி இயற்கை விவசாயிகள் குழு நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுடன் இயற்கை விவசாயம் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்த கூட்டம் குழுத் தலைவர் செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவிகள் இயற்கை விவசாயம், அதில் உள்ள சவால்கள் மற்றும் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்த கலந்துரையாடல் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததுடன், இயற்கை விவசாயம் குறித்த விரிவான அறிவை பெற உதவியதாக மாணவிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: