சென்னை: பாரத் மின்சார உச்சி மாநாடு 2026 குறித்த அறிமுக நிகழ்ச்சி தியாகராய நகரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் தென்மண்டல துணை தலைவர் சஷி கிரன் லூயிஸ், முதுநிலை இயக்குநர் சந்தன் அஸ்வத் மற்றும் தேசிய மின் கட்டமைப்பு கழகம், தேசிய அனல் மின் கழகம், தேசிய நீர்மின் கழகம், ஊரக மின்மயமாக்கல் கழகம் உள்ளிட்ட மத்திய மின்சார அமைச்சகத்தின் துணை நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துரையாடினர்.
இதை தொடர்ந்து நிருபர்களுக்கு நிர்வாகிகள் அளித்த பேட்டி: மின்மயமாக்கல் வளர்ச்சி, நிலைத்தன்மையை மேம்படுத்துதல், உலகளவில் இணைத்தல் என்ற கருப்பொருளில் பாரத் மின்சார உச்சி மாநாடு 2026 டெல்லியில் வரும் மார்ச் 19 முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. ஒன்றிய மின்சாரம் மற்றும் தொழில்துறை இணைந்து நடத்தும் மாநாட்டை மின்சார அமைச்சகத்தின் துணை நிறுவனங்களின் ஆதரவோடு, பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஒருங்கிணைக்கிறது.
