தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா

நாகர்கோவில், ஜன. 8: தியாகராஜ சுவாமிகளின் 179-வது ஆராதனை விழாவையொட்டி வடிவீஸ்வரம் பெரிய தெரு  குரு அற்புத ராகவேந்திரா கோயிலில் பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது. சங்கீத வித்வான் தென்கரை மகாராஜன், வடிவீஸ்வரம் ராமசேஷன், சங்கீத விதுஷ் சாந்தா சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சுசீந்திரம் முன்னப்பன்,  ராம் ஆகியோர் மிருதங்கம் வாசித்தனர். இதில் பாடகர்கள் மங்களம், உமா ஹரிகரன், சலஜகுமாரி, ரேவதி கலா, கௌரி கலா, லட்சுமி, சோபிகா, பாரதி, லக்சரா, தர்ஷனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடினர். அறக்கட்டளை தலைவர் ஐயப்பன் அனைவருக்கும் பரிசு வழங்கி கௌரவித்தார்.

Related Stories: