கீழப்பாவூரில் தென்னிந்திய மின்னொளி கபடி போட்டி அய்யாத்துரை பாண்டியன் துவக்கி வைத்தார்

தென்காசி, ஜன. 26:  கீழப்பாவூரில் தென்னிந்திய அளவில் மின்னொளி கபடிப் போட்டியை திமுக வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியன்  துவக்கி வைத்தார்.  கீழப்பாவூர் விளையாட்டுக்குழு சார்பில் 2ம் ஆண்டாக தென்னிந்திய அளவில் மின்னொளி கபடி போட்டி கீழப்பாவூர் புது மைதானத்தில் 22ம் தேதி துவங்கியது. முதல் நாள் போட்டிகளுக்கான துவக்க விழாவுக்கு கீழப்பாவூர் விளையாட்டுக்குழு தலைவரான ஆசிரியர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக செயலாளரான நல்லாசிரியர் அருள்இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.பி. இளங்கோ, செயலாளர் வக்கீல் வீரன், துணைச்செயலாளர் வைகுண்டராஜ் முன்னிலை வகித்தனர். விளையாட்டுக்குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் விளையாட்டுக் குழு கொடியேற்றினார்.  இதையடுத்து ஆண்கள் அணிக்கான முதல் போட்டியை திமுக வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியன் துவக்கிவைத்து வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். முன்னதாக அவர், கீழப்பாவூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 நிகழ்ச்சிகளில் விவசாய அணி மாநில துணைச்செயலாளர் செல்லப்பா, பொதுக்குழு  உறுப்பினர் காசிதர்மம் துரை, ஒன்றியச் செயலாளர்கள் செங்கோட்டை ரவிசங்கர்,  வாசுதேவநல்லூர் பொன் முத்தையாபாண்டியன், வக்கீல் அணி முன்னாள் மாவட்ட  அமைப்பாளர் அருள், வர்த்தக அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமார்,  குறும்பலாப்பேரி முன்னாள் செயலாளர் டால்டன், முன்னாள் பொதுக்குழு  உறுப்பினர் இளங்கோ, சுப்பிரமணியன், பெத்தேல் ராஜ், கீழப்பாவூர் யூனியன்  முன்னாள் சேர்மன் பொன் அறிவழகன், சுரண்டை பேரூர் துணைச்செயலாளர் பூல்  பாண்டியன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் ஈஸ்வரன்,  முன்னாள் எஸ்ஐ பழனிசாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் குலையநேரி திருமலை  குமார், ராமர், வெள்ளைத்துரை பாண்டியன், மருதுபாண்டியன், மாணவர் அணி  ஆலங்குளம் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் பூலோகராஜ், தகவல் தொழில்நுட்ப அணி  அருணா, செல் சிட்டி அல்லா பிச்சை, சுரேஷ், சுரண்டை தங்கஇசக்கி ஜோதிடர்,  வீ.கே.புதூர் வேல்ராஜ், சண்முகவேல், கபிரியேல், இளைஞர் அணி செங்கோட்டை  ஒன்றிய துணை அமைப்பாளர் இசக்கி துரை, புதூர் துணை அமைப்பாளர் சந்தோஷ், தில்லை பேச்சிமுத்து, அரபாவகாப் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  விளையாட்டுக்குழு பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories: