தென்காசியில் வர்த்தக சங்க பொதுக்குழு

தென்காசி, ஜன. 24: நெல்லை- தென்காசி 4 வழிச்சாலை பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என  வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. அச்சங்கத்தின் சார்பில் தென்காசியில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் பரமசிவன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர்  ஜெயராமன் வரவு செலவு கணக்கு வாசித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் அன்பழகன்,  அழகராஜா, முத்துகிருஷ்ணன், கே.டி.கே.காதர் முகைதீன், அகமது மீரான்,  முருகன் ராஜ், கலீல் ரகுமான், முகமது அஜீஸ், சங்கரன், காதர் மைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வர்த்தக சங்க நிலத்தில் புதிய கட்டிடம்  கட்டுவது. நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகளை விரைந்து துவங்க  வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>