நாங்குநேரியில் மாநில செயற்குழு கூட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்அமல்படுத்த வேண்டும்

நாங்குநேரி, ஜன. 24:  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாங்குநேரியில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்க செயற்குழு கூட்டம் நாங்குநேரியில் மாநில தலைவர் முத்தையா தலைமையில் நடந்தது மாவட்டத் தலைவர்கள் நெல்லை பரமசிவம், தென்காசி பரமசிவன்  முன்னிலை வகித்தனர் நெல்லை மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு 4ம்நிலைக்கான காலமுறை ஊதியம் வழங்குவதோடு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

விஏஓ பதவி உயர்வுக்கு 10 ஆண்டு பணி மூப்பு என்பதை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். 30சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு மண்டல வாரியாக விஏஓ பதவி 30% ஆக வழங்க பிறப்பிக்கப்பட்ட ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் மார்பன், ஜமாலுதீன், பிச்சை, ஐயப்பன் இமானுவேல், இசக்கிமுத்து, பிச்சுகுட்டி மற்றும் சங்கத்தின் பொருளாளர்கள் நெல்லை நாராயணன், தென்காசி சுப்பிரமணியன், கவுரவத் தலைவர் சண்முகசுந்தர பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் முருகன், கருணாலய பாண்டியன் மற்றும் மாவட்ட வட்டார குறுவட்ட அளவிலான கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சேர்மன் துரை நன்றி தெரிவித்தார்.

Related Stories:

>