சென்னை: அரசின் திட்டங்களால் மக்கள் பயன்பெறுவதை பார்த்து பொறுக்க முடியாமல் பொறாமையில் குறைகிறார் பழனிசாமி என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் “ஏப்ரல் தேஜகூ ஆட்சி மலரும், மோடி தலைமையில் கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம் என அமித்ஷா பேசியுள்ளார். ஆட்சியில் பங்கு என்றதோடு பழனிசாமியின் பெயரைக்கூட அமித்ஷா உச்சரிக்கவில்லை. கூட்டணி தலைமை எடப்பாடிதான் என வீராவேசம் காட்டினாலும் அவரது பெயரைக் கூட அமித்ஷா சொல்ல மறுக்கிறார். கூட்டணிக்கு தலைமை என்ற பதவியிலேயே தடுமாறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. கூட்டணி தலைமை என்ற பதவியிலேயே தடுமாறும் எடப்பாடிதான் முதல்வர் பதவிக்கு வரப் போகிறாரா?” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
