கூட்டணி ஆட்சிதான் எடப்பாடிக்கு நயினார் பதிலடி

நெல்லை: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என எடப்பாடிக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் பதிலடி கொடுத்து உள்ளார். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நெல்லையில் அளித்த பேட்டி: புதுக்கோட்டையில் நடந்த பிரசார பயணத்தின் நிறைவு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று சிறப்பித்தார். அவரது வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இரு நீதிபதிகள் பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலன் கருதி அரசு எடுக்கும் எந்த முடிவையும் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். ஆனால் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். இது வேதனைக்குரிய விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றார். இந்நிலையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் அமித்ஷா கூறியதை வழிமொழிந்து தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: