பசிச்சவங்க வீட்டுல முதல்ல விளக்கேற்றுங்க: சீமான் பேட்டி

கோவை: கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்ற வேண்டும் என பாஜவினர் கூறுகின்றனர். நாட்டில் பல கோடி மக்கள் பசியாக இருக்கிறார்கள். முதலில் அவர்களது வீடுகளில் விளக்கேற்றுங்கள், பிறகு வீடு வீடாக விளக்கேற்றலாம். வீடுகள் எல்லாம் இருட்டிலா உள்ளது?’’ எனத் தெரிவித்தார்.

Related Stories: