முதலமைச்சருக்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பாராட்டு

 

நாகர்கோவில், ஜன.5: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சரை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளரும், ஜாக்டோ ஜியோ பேரியக்கத்தின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமான தியாகராஜன் முதலமைச்சருக்கு புத்தகம் வழங்கி பாராட்டினார். அமைச்சர்கள் உடனிருந்தனர்.

Related Stories: