ஆறுகாணி அருகே கேரளாவில் இருந்து மது கடத்தியவர் கைது

 

மார்த்தாண்டம், ஜன.5: ஆறுகாணி அருகே செண்பக பாறை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பனிமருதம்பாறை பகுதியை சேர்ந்த ரஜேஷ் என்பவர் ஓட்டி வந்த பைக்கை போலீசார் சோதனை செய்தனர். அப்போது கேரளாவில் இருந்து விற்பனைக்காக 8 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. உடனே அவரிடம் இருந்த மதுபாட்டில்களை
பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Related Stories: