மார்த்தாண்டம், ஜன.5: களியக்காவிளை அருகே கொடவிளாகம் பாலகுழி புத்தன்வீடு பகுதியை சேர்ந்தவர் வினு மகன் விபின் (27). கொத்தனார். அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் பிரசாந்த் என்பவரது பைக்கை எரித்த வழக்கில், விபினுக்கும் பிரசாந்த்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று விபின் மேக்கோடு நாகராஜா கோயில் அருகே பைக்கை நிறுத்தி
விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரசாந்த், சுந்தரன் மகன் அஜி (30), ராஜேஸ்வரன் மகன் விஜேஷ் (28), ராஜையன் மகன் குமார், சந்தீப், மனு மற்றும் மகேஷ் ஆகியோர் சேர்ந்து தகராறு செய்து விபின் பைக்கை எரித்துவிட்டு மிரட்டல் விடுத்து சென்றனர். பைக்கின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என கூறப்பட்டது.
இதுகுறித்து விபின் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொத்தனாரின் பைக்ைக எரித்த பிரசாந்த் உள்பட 7 பேர் மீது வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
