ராமேஸ்வரம்,ஜன.5: தங்கச்சிமடம் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வலசை தெரு பகுதியில் அமைந்துள்ள தீவு அற்புத குழந்தை இயேசு ஆலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையெடுத்து மாலை 6 மணியளவில் ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் ராமநாதபுரம் மறைவட்ட அதிபர் அருட்பணி சிங்கராயர் திருவிழா கொடியை ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார்.
பங்குதந்தை இன்பென்ட் ராஜ், உதவி பங்குதந்தை ஆண்டோ பிரசாந்த் ஆகியோர் தலைமை ஏற்றனர். ஜன.13ம் தேதி மாலையில் திருவிழா திருப்பலி மற்றும் தேர்பவனி நடைபெறுகிறது. ஜன.14ம் தேதி காலையில் பொங்கல் திருப்பலி நடைபெறும். தினமும் மாலையில் ஆலயத்தில் நவநாள் சிறப்பு திருப்பலி நடைபெறும். கொடியேற்ற நிகழ்வில் த.சூசையப்பர்பட்டினம் பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், அருட்தந்தையர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
