திருச்சி, டிச.24:திருச்சி புத்தூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் முருகன் (55). இவர் கரூர் பைபாஸ் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக உள்ளார். டிச.22ம் தேதி கடையிலிருந்து தனது டூவீலரில் வீட்டிற்கு சென்றார். அப்போது தென்னூர் சாலை தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது, டூவீலரில் அவ்வழியாக வந்த 3 பேர், முருகன் வைத்திருந்த கைப்பைAயை பறித்து சென்றனர்.
அந்த கைப்பையில் ரூ..28 ஆயிரம் பணம் வைத்திருந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து கைப்பையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
