கிராம சபை கூட்டம் நடத்தக்கோரி மனு

மதுரை, ஜன. 24: கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிராம சபை கூட்டங்களை ஜன.26ம் தேதி குடியரசு தினத்தில் நடத்த வேண்டும் என மக்கள் நீதி மையம் சார்பில் கலெக்டரிடம் நேற்று மனு வழங்கப்பட்டது. கொரோனாவால் பல கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவில்லை. எனவே, வரும் ஜன.26 குடியரசு தினத்தில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணி தென்மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில், ஏரளமான அக்கட்சியினர் நேற்று கோரிக்கை மனு வழங்கினர்.

Related Stories:

>