ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது

சோழவந்தான், ஜன. 24: சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோயிலில் நாளை (ஜன.25) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, கோ பூஜையுடன் யாக சாலை துவங்கி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெறுகின்றன. நாளை (ஜன.25) காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் தொடங்கி, கடங்கள் புறப்பாடாகி, காலை 9 மணி முதல் 9:55 மணிக்குள், ராஜகோபுரம் மற்றும் ஜெனகை மாரியம்மன், விநாயகர், முருகன், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories:

>