சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.பி.சூரியபிரகாசம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். தவெகவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சமீபத்தில் ஆஜரானதற்கு கட்சி தலைமை இவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவி மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் கூறியுள்ளார். இவர், காங்கிரஸ் கமிட்டியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
