ஊரக வளர்ச்சித் துறையில் களக்காடு, நாங்குநேரி உட்பட 3 பிடிஓக்கள் மாற்றம்

நெல்லை, ஜன. 3: நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பிடிஓக்கள் மூவரை மாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன் படி களக்காடு பிடிஓ (வட்டார ஊராட்சி) கண்ணன் நாங்குநேரி பிடிஓவாகவும் (வட்டார ஊராட்சி), நாங்குநேரி பிடிஓ (வட்டார ஊராட்சி) சங்கர்ராம் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிடிஓவாகவும் (டாபிநெட்), இந்த பணியில் இருந்த ராஜம் களக்காடு பிடிஓவாகவும் (வட்டார ஊராட்சி) மாற்றப்பட்டுள்ளனர். மேலும் நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் உதவியாளராக பணியாற்றும் பால்ராஜ் துணை பிடிஓ பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் கண்காணிப்பாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: