சிவகங்கை, ஜன. 3: செயலிழந்த அஞ்சலக சேமிப்பு கணக்குகளை மீண்டும் புதுப்பிக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அஞ்சல் துறையில் செயலிழந்த சேமிப்பு கணக்குகளை புதுப்பித்துக்கொள்ள ஜன.15ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் சிவகங்கை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது. கணக்குகளை புதுப்பிக்க சேமிப்பு கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, ஆதார் கார்டு, பான் கார்டு நகல் ஆகியவற்றை சமர்பிக்கலாம். எனவே வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கணக்குகளை புதுப்பித்துக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
