பனி, வேர்அழுகல் நோயால்

துறையூர், ஜன.24: துறையூர் அருகே உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தொடர் மழை காரணமாக சேதமடைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். துறையூர் அருகே உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளில் பல கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இதுபோல் சின்ன வெங்காயம் பயிரிட்ட செங்காட்டுப்பட்டி, நாகலாபுரம், செல்லிப்பாளையம், நரசிங்கபுரம், வேங்கடத்தனூர், மருவத்தூர் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் 2000 ஏக்கர் மழை  மற்றும் பனியினாலும் வேர் அழுகல் நோயினால் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுளளனர். சின்னவெங்காயம் பாதிப்புக்கு தமிழகஅரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: