சங்கராபுரம், ஜன. 1: சங்கராபுரம் அருகே உள்ள வட சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியாப்பிள்ளை மகன் பச்சையாப்பிள்ளை(79). இவருக்கு கடந்த 28ம் தேதி வயிறு வலிப்பதாக தெரிவித்திருந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் நெல் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தினை குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார்.
அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது பச்சையாப்பிள்ளை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் பச்சையாப்பிள்ளை மகன் நாகராஜ் தந்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
