டூவீலரில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

மதுரை, டிச.31: மதுரை ரிசர்வ் லைன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணியைச் சேர்ந்த 100 போலீசார் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து டூவீலர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியானது ரிசர்வ் லைனில் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து ஆத்திகுளம், நாராயணபுரம், ஐயர்பங்களா வழியாக யாதவா பெண்கள் கல்லூரி வரை சென்று மீண்டும் அதே வழியாக ரிசர்வ் லைனில் நிறைவு பெற்றது.

இந்த பேரணியை மதுரை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் எஸ்.வனிதா துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6 ஆம் அணியின் துணை தளவாய் தாமஸ், உதவி தளவாய்கள் சுந்தர்ஜெய ராஜ், மான்சிங், போக்குவரத்து உதவி கமிஷனர் இளமாறன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

 

Related Stories: