சாத்தான்குளம், டிச. 31: புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.43 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க செயலாட்சியர் வளன் மிக்கேல் தளபதி, உறுப்பினர்களுக்கு கடன்களை வழங்கி சிறப்புரையாற்றினார். கேசிசி பயிர்க்கடன் 3 பேருக்கு ரூ.7.04 லட்சம், கேசிசி 5 பேர் ரூ.2.92 லட்சம், மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்கள் 28 பேருக்கு ரூ.36.40 லட்சம், கேசிசி மீன்பிடி மற்றும் பராமரிப்பு மூலதன கடன் 82 பேருக்கு ரூ.96.84 லட்சம் என 118 உறுப்பினர்களுக்கு ரூ.143.20 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. இதில் சங்க உதவி செயலாளர் தாமஸ், கணக்காளர் யோசேப்பு, சிற்றெழுத்தர் பகவதி தாஸ், நகை மதிப்பீட்டாளர் சுடலைமுத்து, பொது சேவை மைய பணியாளர் நந்தினி மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். சங்க செயலாளர் அருள்தாஸ் நன்றி கூறினார்.
