பிரியாணி கடைக்காரரை மிரட்டிய 2 பேர் கைது

திருச்சி, ஜன.22: திருச்சி திருவானைகோவில் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவர் டிரங்க் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் பாரில் மது குடித்த 2 பேர் பிரியாணி சாப்பிட்டு பணம் கேட்டதற்கு தகராறில் ஈடுபட்டு கார்த்திக்கிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரங்கம் எஸ்ஐ மோகன்ராஜ் வழக்குபதிந்து ரங்கம் சிங்கர் கோவில் தெரு மாதேஸ் (19), ரங்கம் ஆர்எஸ் ரோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (21) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Related Stories:

>