வேளாண் துறை செயலர் பேட்டி அழுகிய நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு பழனிமாணிக்கம் எம்.பி. ஆறுதல்

நீடாமங்கலம், ஜன.22: நீடாமங்கலம் ஒன்றியத்தில் நீரில் அழுகிய நெற்பயிர்களை பார்வையிட்டு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூர் தென்பாதி, காட்டக்குடி, காரக்கோட்டை, செருமங்கலம், எடமேலையூர் மேற்கு, எடகீழயூர், புல்லவராயன் குடிகாடு ஊராட்சிகளில் கனமழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு தஞ்சை எம்பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவநாதன், ஒன்றிய துணை தலைவர் ஞானசேகரன், மன்னை ராஜபூபாலன், தொமுச வடுவூர் நீலமேகம், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

விவசாயிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்டஈடு வழங்க வேண்டும். விவசாயிகள் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உடனடியாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும். சாகுபடி செய்ய நிபந்தனையின்றி பயிர் கடன் வழங்கிட வேண்டும் என கண்ணீர் மல்க கூறினர். இதையடுத்து எம்பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசின் கவனத்துக்கு உங்கள் கோரிக்கைகளை எடுத்து சென்று நிறைவேற்ற நிச்சயம் முயற்சி செய்வேன் என்றார்.

Related Stories:

>