மக்கள் கிராம சபை மூலம் ஒரு லட்சம் மக்களை சந்தித்த திமுக., நிர்வாகிகள்

ஊட்டி,ஜன.22: நீலகிரியில் மக்கள் கிராம சபை நிகழ்ச்சிகள் மூலம் ஒரு லட்சம் மக்களை திமுக., நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். மாவட்ட செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  திமுக., தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அதிமுக., அரசின் ஊழல்கள், மக்கள் விரோத செயல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்திடும் வகையில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்திட வேண்டும் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகர கழகங்கள் 9 ஒன்றிய கழகங்கள் 11 பேரூர் கழகங்களில் சுமார் 260க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம, வார்டு சபை கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது.

இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வரும் தேர்தலில் திமுக., வெற்றிப்பெற்று ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் எனக்கூறியும், அதிமுக.,வை நிராகரிக்கிறோம் எனக்கூறி முழக்கமிட்டது மிக எழுச்சியாக இருந்தது.

இந்த மக்கள் கிராம சபை,  வார்டு சபை கூட்டங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெறுவதற்கு காரணமாக விளங்கிய நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முபாரக் கூறியுள்ளார்.

Related Stories:

>